அருள்மிகு ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், கருப்பூர் நெல்வாய் [K.Nelvoy] கிராமம்

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூர் தாலுக்காவில் கருப்பூர் நெல்வாய் என அழைக்கப்படும் கே. நெல்வாய் என்னும் கிராமம் அமைந்துள்ளது. நெல்வாய் என்ற பெயரிலேயே வேறு சில கிராமங்களும் உள்ளதால், அவற்றிலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்க அருகாமையில் உள்ள கருப்பூர் என்ற கிராமத்தையும் சேர்த்து க. நெல்வாய் என இந்த கிராமம் அழைக்கப்படுகிறது.

இக்கிராமம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து 35 கீ.மீ தொலைவிலும், மதுராந்தகத்தில் இருந்து 15 கீ.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தெற்கே மதுராந்தகம் தாலுக்காவும் வடக்கே வாலாஜாபாத் தாலுக்காவும் கிழக்கே செங்கல்பட்டு தாலுக்காவும் மேற்கே அச்சரபாக்கம் தாலுக்காவும் இதனிடையே அழகிய சூழ்நிலையில் அமைந்துள்ள சிறிய கிராமமாகும். இக்கிராமம் கடல்மட்டத்தில் இருந்து 31 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்குத் தெற்கே திரெளபதி அம்மன் கோவில், வடக்கே கல்லணை விநாயகர் கோவில் மற்றும் வடகிழக்கே சிறப்புமிக்க கைலாசநாதர் கோவிலும் உள்ளது. இவற்றுள் கைலாசநாதர் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். சில கற்றறிந்த தமிழறிஞர்களின் கூற்றுப்படி, இக்கோவில் நாயன்மார்கள் பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக, இக்கோவில் அடர்ந்த புதர்களால் சூழப்பட்டு பாழடைந்து கிடந்துள்ளதால் கால பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை.

அரசு வருவாய் ஆவணங்களின்படி, இக்கோவில் 12000 சதுரஅடி நிலப்பரப்பில் அமைந்திருந்ததாகத் தெரிகிறது. இக்கோவிலுக்கு சொந்தமாக சில ஏக்கர் நிலங்களும் இருப்பது இந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கோவிலுக்கு கிழக்கே குளம் ஒன்று இருந்ததற்கான ஆதாரம் தற்போதும் உள்ளது. இக்குளம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து உள்ளது. சிவாலயத்தின் மூலவர் சன்னிதி எதிரில் குளம் அமைவது என்பது அபூர்வமாகும். அதுபோன்ற அமைப்பில் இக்கோவில் அமைந்துள்ளது சிறப்பாகும். முதியோர் சிலர் கூற்றுப்படி, நல்லுள்ளம் கொண்ட அறிஞர்கள் பலரைக் கொண்டு இக்கிராமம் பண்டைக்காலத்தில் சிறந்து விளங்கியுள்ளது. எல்லோராலும் மதிக்கத்தக்க நிர்வாகத்திறன் படைத்த பெரியோர்கள் பலர் இக்கிராமத்தில் இருந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக இக்கிராமம் அரசின் பராமரிப்பு இல்லாமல் தகுந்த சாலை வசதி இன்றி தவித்து வருகிறது. தற்போதுள்ள கிராம நிர்வாகம் இந்நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டாலும், வளர்ச்சி பணிகள் பொறுமையாகவே நடைபெறுகிறது.

புதுவையே சேர்ந்த உழவாரப்பணி மன்ற உறுப்பினர்கள் சிலர் 2018 ஆம் ஆண்டு அகஸ்டு 13 ஆம் நாள் அன்று இக்கிராமத்திரை சந்தித்து இக்கோவில் உழவாரப்பணி குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது 2016 ஆம் ஆண்டு அகஸ்டு 20ம் நாள் முதல் உழவாரப்பணியினை ஆரம்பித்து கோவில் சுத்தம் செய்து முடியும்வரை அங்கேயே தங்கியிருந்து முடிப்பது என முடிவு செய்தனர். இக்கோவில் கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். சிவனுக்கு இடப்புறம் இருந்த சக்தி சிலை களவு போனதால் சக்தி நாக வடிவமாய் சிவனுக்கு இடப்புறம் புற்றிலிருந்துகொண்டு சிவசக்தி சொரூபமாக விளங்கிவருகிறார். கருவறையை சுற்றியுள்ள மற்ற கட்டிடங்களும் சிதிலமடைந்து உள்ளது ஒரு கட்டிடத்தில் மட்டும் பழுதடைந்த ஆறுமுகர் சிலை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கிராமத்தினர் விருப்பப்படி விநாயகர், ராகு கேது மற்றும் ஐந்து தலை நாகம் போன்ற சிலைகளை அருகே தல விருட்சமாக உள்ள ஆல மரத்தின் அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் 2016 ஆம் ஆண்டு அகஸ்டு 21ம் நாள் அன்று பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இக்கிராமத்தினர் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியின் உந்துதல் போல, அவர்களே உத்வேகம் பெற்று கோவில் அமைந்துள்ள பகுதியினை சுத்தப்படுத்தி, கோவில் அமைந்துள்ள பகுதியின் புகைப்பட நகல்களை பல சிவனடியார்களுக்கு அனுப்பி வேறு ஏதேனும் செய்யவேண்டி உள்ளதா எனக் கேட்கும் அளவிற்கு இத்திருப்பணியில் ஈடுபாடு கொண்டனர்.

சிவனடியார்கள் கிராம மக்களின் ஈடுபாட்டினைக் கண்டு வியந்து, குறித்த நேரத்தில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வைத்து பூஜைகளை தொடர்ந்து நடத்தவும், தினசரி விளக்கு ஏற்றவும் அறிவுறித்தினார். மேலும் கிராம மக்களிடம் பேசி மேற்கொண்டு நடத்தவேண்டிய செப்பனிடுதலை துவக்க ஏற்பாடு செய்தனர்.

பலவகையான கருத்து பரிமாற்றங்கள், பல் வேறு சிவாலயங்களை பார்வையிட்டும் ஒரு வரைபடம் தயாரிக்கப்பட்டு 2-12-2018 அன்று பூமி பூஜை நடத்தலாம் என்று கிராமத்தினர் முடிவு செய்தார்கள், பூமி பூஜை பத்திரிக்கையைக் கீழே காணலாம்.

பூமி பூஜை நாள் அன்றே வேலை துவங்கியது. பணியின் போது எடுத்த படங்களை கீழே காணலாம்.


*தங்களின் வருகையையும், ஆதரவையும் அன்புடன் எதிர்பார்க்கும் கருப்பூர், க. நெல்வாய், வடக்கு வயலூர், மற்றும் மாவடி கிராம மக்கள்*

புகைப்படங்கள்

வீடியோக்கள்

நன்கொடை வழங்க வங்கி விவரம்

Name : ARULMIGU THYLNAGI KAYNDHR ANMGA ARKTLI
A/c No: 50200037615218
Branch: HDFC RK Salai Chennai
IFSC code: HDFC0001097

அருள்மிகு ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், கருப்பூர் நெல்வாய் [K.Nelvoy] கிராமம்

Powered by LBN Tech Solutions

Back to Top